இந்த விடயத்தினை நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நாளை மறுதினம் (21) முற்பகல் 10 மணிக்கு முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதனைத்தொடர்ந்து, முற்பகல் 11.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி முன்வைப்பார் என நாடாளுமன்ற செயலாளர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.