சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமையால் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணையகத்தில் தலைவர் உட்பட 7 பேர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல்யாப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படாமல் 6 உறுப்பினர்களுடன் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
அதில் அங்கத்தவராக இருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா திடீரென காலமானார்.
இதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடமும் இதுவரை நிரப்பப்படாததால் குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.