உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

11

தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் (Australia) தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுக்கூட்டத்திற்கு இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த பவளைப்பாறையானது, 32 மீற்றர் நீளம், 34 மீற்றர் அகலம் மற்றும் 5.5 மீற்றர் உயரம் கொண்டது என கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பானது, பவளப்பாறைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்துவதாக விஞ்ஞானிகளை பாராட்டிய அந்நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடலில் பவளம்எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் பவள பாறைகள் உருவாகின்றன.

கடல்களின் மழைக்காடுகள் என அழைக்கப்படும் இந்த பவளப்பாறைகள் சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Comments are closed.