தாய்லாந்து, இந்தியப் பயணிகளுக்கான வீசா இல்லாத நுழைவு திட்டத்தை (Visa-Free Entry) காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை (TAT) உறுதிபடுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்திய பயணிகள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெறுகின்றனர்.
மேலும், 30 நாட்கள் கூடுதலாக தங்க உள்ளூர் குடியுரிமை அலுவலகத்திடம் அனுமதி பெறலாம்.
இதன்மூலம், இந்திய பயணிகள் விசா விண்ணப்ப நெருக்கடிகள் இன்றி தாய்லாந்திற்கு செல்ல முடியும், இதனால் பயண அனுமதிகள் தொடர்பான சிக்கல்களை தவிர்க்கலாம்.
2022 நவம்பர் 10ல் அறிமுகமான இந்த Visa-Free Entry திட்டம் முதலில் 2023 மே 10 வரை மட்டுமே அமுலில் இருந்தது. பின்னர் தற்காலிகமாக 2023 மே 11 முதல் நவம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால், இப்போது இத்திட்டத்தை காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை (TAT) தெரிவித்துள்ளது.
விசா இல்லாத பயணம் என்பது பயணிகள் எந்தவொரு விசாவும் பெறாமல் அல்லது வருகை நேரத்தில் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதைக் குறிக்கிறது.
பயணத்திற்கான செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால் அவர்கள் சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை சோதனை காப்பகத்தில் காட்டினால் போதும்.
இந்திய பயணிகளுக்கு தாய்லாந்து முக்கிய விசா இல்லாத பயண இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.
2024 முதல் மூன்று மாதங்களில் தாய்லாந்து 9.4 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்றுள்ளது. இதனால் அதன் பொருளாதாரத்திற்கு 454.6 பில்லியன் பாட் ($12.4 பில்லியன்) வருவாய் கிடைத்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024-ல் மொத்தம் 40 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்கான இலக்குடன் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. இதுவரை 1.64 மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர்.
Comments are closed.