நியூசிலாந்து – இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி – குறுக்கிட்ட மழை

6

சுற்றுலா நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தற்போது மழை குறுக்கிட்டுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி (sri lanka) முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய குசல் மெண்டிஸ் (Kusal Mendis) மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ (Avishka Fernando) ஆகியோர் சதங்களை கடந்தனர்.

குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 143 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ (Avishka Fernando) 100 ஓட்டங்களையும் பெற்று ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Jacob Duffy 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியில் மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து அணிக்கு டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படலாம்.

சுற்றுலா நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இலங்கை அணிக்கும் ( Srilanka) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

தம்புள்ளையில் இன்று (13.11.2024) இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நான்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியீட்டிய இலங்கை, அந்த வெற்றி அலையைத் தொடரும் குறிக்கோளுடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

உபாதை காரணமாக பிரதான சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் துஷான் ஹேமன்த இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் அவரை விட அனுபவசாலியும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் 2ஆவது போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியவருமான ஜெவ்றி வெண்டசேக்கு இறுதி அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.