புள்ளடி மாத்திரம் பயன்படுத்துங்கள் – பொதுமக்களிடம் கோரிக்கை

10

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Rathnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன.

எனினும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போதும், விருப்பு வாக்குகளை வழங்கும்போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.

எனவே உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை (14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான விடுமுறையை தனியார் மற்றும் வங்கித்துறையில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து வாக்காளர்களும் தமது இறையாண்மை அதிகாரத்தை பிரயோகிக்க தமது வாக்கை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.