ட்ரம்ப் வெற்றியால் பதற்றமடைந்துள்ள நாடுகள்: பிரித்தானியாவுக்கு மட்டும் விதிவிலக்கு?

6

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதுமே, பல நாடுகள் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவலை அடைந்துள்ளன.

சுவிட்சர்லாந்து, உலகிலேயே இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் போன்ற பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது அமெரிக்காவுக்குத்தான் என்னும் நிலையில், அமெரிக்கா தான் இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது 20 சதவிகிதம் வரை வரி விதிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் முதல் கட்டமாக 0.2 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்றும், அதே நிலை தொடருமானால், ஒரு சதவிகிதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஜேர்மனி, அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளர் நாடுகளில் ஒன்றாகும். ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியாவாரானால், அவர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60 சதவிகிதமும், ஜேர்மனி மீதான மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10 முதல் 20 சதவிகிதமும் வரி விதிப்பார்.

அதனால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஜேர்மன் தயாரிப்புகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். குறிப்பாக, தானியங்கி துறையும், மருந்தகத் துறையும் கடுமையாக பதிக்கப்படும் என ஜேர்மனி கருதுகிறது.

இந்நிலையில், வரிவிதிப்பிலிருந்து பிரித்தானியாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நியூ ஜெர்ஸி ஆளுநரான Phil Murphy, ட்ரம்ப் தனது வரி விதிப்பு திட்டத்தில் பிரித்தானியாவை சேர்க்கமாட்டார் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

சீனா வேண்டுமானால் வரி விதிப்பு குறித்து கவலைப்பட வேண்டியிருக்கலாம், ஆனால், நட்பு நாடுகளான பிரித்தானியா போன்ற நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிக்கமாட்டார் என்று கூறியுள்ளார் Phil Murphy.

அத்துடன், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ளதால், பிரித்தானியாவுக்கு ஆதரவாக செயல்படவே ட்ரம்ப் விரும்புவார் என்றும் கூறியுள்ளார் Phil Murphy.

Comments are closed.