அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வெற்றி, கனடாவின் (Canada)பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழக (Carleton University) துணைப் பேராசிரியர் இயன் லீ ( Iain Lee) விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ட்ரம்பின் வெற்றி தென் எல்லை பகுதியில் கனடாவிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எல்லை தாண்டிய வர்த்தக நடவடிக்கைகளில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது பத்து முதல் 20 வீத வரி விதிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ட்ராம்பின் பொருளாதார கொள்கைகள் கனடாவை பாதிக்கும் வகையில் அமையும் என இயன் லீ எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.