இஸ்ரேல் பிரதமரால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அந்நாட்டு புதிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமரால் நேற்றைய தினம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட யோவ் கெல்லன்டின் பதவிக்கு இஸ்ரேல் காட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் இஸ்ரேல் காட்ஸ் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு பின்வருமாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்துகள்.
நாங்கள் ஒன்றாக அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணியை வலுப்படுத்துவோம்.
பணயக்கைதிகளை மீட்டெடுப்போம், மேலும், ஈரான் தலைமையிலான தீய அச்சை முறியடிக்க உறுதியாக நிற்போம்’’ என கூறியுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் அறிவிப்பின் பிரகாரம் யோவ் கெல்லன்டின் நேற்ற பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.
Comments are closed.