அரசியல் மேடைகளில் பொய் சொல்பவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹொரணை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற போது நாட்டில் புரட்சி ஏற்பட்டது. நாங்கள் மக்களுக்கு நெருக்கமாகவும், மக்களுக்காகவும் ஒரு புரட்சியை நடத்துகின்றோம்.
இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
14ஆம் திகதி நாட்டை சுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு மக்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.