தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் (T.Rajeevan) எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில், குறித்த பாடலானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாடலாசிரியர் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரிக்கும் பாடலை எழுதியுள்ளதோடு, தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி பிரகாஸின் (G. V. Prakash Kumar) தயாரிப்பிலும் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார்.
இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை.
இந்த பாடலாசிரியர் இதுவரைக்கும் 300 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளதுடன் செஞ்சோலை பாடல்கள் தொடக்கம் ஆனையிறவு நாயகனே பாடல் தொட்டு ஈழத்தின் முதன்மையான ஆலயங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் நடிகராகவும், பாடகராகவும், அறிவிப்பாளராகவும், திரைகதை எழுத்தாளராகவும் மற்றும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக் கொண்டவராகவும் விளங்கி வருகின்றார்.
மேலும், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களிலும் முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.