2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, நவம்பர் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகள் கசிந்ததாகக் கூறப்படும் 01 ஆம் இலக்க வினாத்தாள் செல்லுபடியற்றதாக ஆணை பிறப்பிக்கப்பட வேண்டுமெனவும், மீண்டும் பரீட்சையை நடத்துமாறும் மனுதாரர்கள் தமது மனு மூலம் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு நேற்று (24) நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், குறித்த மனு மீதான ஆட்சேபனைகளை நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான மேலும் ஆட்சேபனைகள் இருப்பின் நவம்பர் 12ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மனுவில் உள்ள உண்மைகளை உறுதி செய்யும் வகையில், மனுவின் அடுத்த விசாரணை நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவர்களின் பெற்றோர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Comments are closed.