இலங்கையில் கடுமையாகும் சட்டம் – மீறுவோருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

7

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதற்கு தண்டனைச் சட்டத்தின் 286வது பிரிவின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Comments are closed.