உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று சுட்டிக்காட்டி, வெளியிடப்பட்ட வெளிநாட்டு தூதரகங்களின் பயண ஆலோசனைகள் தொடர்பாக, இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை தொடர்ந்தும் ஏனைய பல நாடுகளும் இந்த பயண ஆலோசனையை விடுத்திருந்தன.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அதன் முக்கிய சுற்றுலாத் துறையின் மீது, வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இது ஏதோ ஒரு கொடூரமான நகைச்சுவையாக உள்ளதா? என்று இலங்கை சுற்றுலா கூட்டணியின் தலைவர் மலிக் ஜே பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, இருவரைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பொருளாதார சவால்கள் மற்றும் அண்மைய விசா செயலாக்க நெருக்கடி ஆகியவற்றில் இருந்து சுற்றுலாத் தொழில்துறையை மேம்படுத்த, இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆலோசனைகள் குறித்து சுற்றுலாத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அறுகம்பை பற்றிய அமெரிக்க எச்சரிக்கையை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் அதனை விரிவுபடுத்தி, இஸ்ரேலிய பயணிகளுக்கு, இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்பதை பரிந்துரைத்துள்ளதாக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்
ஐக்கிய இராச்சியத்தின் ஆலோசனையானது, இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ள நிலையில், அது அமெரிக்காவின் எச்சரிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என மலிக் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தூதரகங்களின் ஒவ்வொரு முன்பதிவும் இலங்கையின் மீட்சிக்கு இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் குறித்த பயண ஆலோசனைகளுக்கு புறம்பாக சுற்றுலாப்பயணிகள், மாயைகளுக்கு (புகை மற்றும் கண்ணாடிகளுக்கு) அப்பால் பார்த்து, இலங்கையை நோக்கிய தொடர்ந்து முன்பதிவு செய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் மலிக் ஜே பெர்னாண்டோ கூறியுள்ளார்.
Comments are closed.