லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

8

லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது காசாவில் போர் நிறுத்தத்தை உருவாக்க வழிவகுக்கும் என அவர் கூறியிருந்தார்.

எனினும், சின்வாரின் மரணம் முடிவல்ல என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை வகித்த சின்வார், கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேலில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஆவார்.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ் அமைப்பினர், இது தம்மை மேலும் பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவாவிற்குள் இஸ்ரேல் ஊடுருவிய பின்னர், 42,500 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.