2024 ஆம் கல்வியாண்டின் பாடசாலை மூன்றாம் தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 கல்வியாண்டு மற்றும் மூன்றாம் தவணை 24.01.2025 அன்று முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மூன்றாம் தவணைப் பரீட்சையை நடாத்தி மாணவர்களுக்கு முன்னேற்ற அறிக்கைகளை வழங்க போதிய அவகாசம் வழங்குமாறு அதிபர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மூன்றாம் தவணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்றாம் தவணை முடிவடையும் 24 ஆம் திகதிக்குள் மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்தி முன்னேற்ற அறிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Comments are closed.