பிளாஸ்டிக் போத்தல்களில் நிறைந்திருக்கும் ஆபத்து! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

13

குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாகவும் அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பிளாஸ்டிக் போத்தல்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலே குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

Comments are closed.