புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

11

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து பல கேள்விகள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்பின், மூன்று கேள்விகள் மாத்திரமேவெளியாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான மதிப்பெண்களை இலவசமாக வழங்க பரீட்சை திணைக்களம் முடிவு செய்திருந்தது.

இதனையடுத்து மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி நேற்றுமுன் தினம் (15) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 54 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளை இரத்து செய்து மீண்டும் பரீட்சையை நடத்த உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.