நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உடல் குறைப்பிற்கு பிறகு படு ஆக்டீவாக இருக்கும் பிரபலம்.
மாநாடு படத்தில் எல்லோரையும் அசர வைத்தவர் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். சிம்பு நடிப்பில் அடுத்து STR 48, தக் லைஃப் படங்கள் திரைக்கு வர உள்ளன.
அண்மையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு சிம்பு பேசியபோது, கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்தியன் 2 படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இன்று ஜுன் 6 தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். எனவே சிம்பு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பிரியாணி அனுப்பி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில், தனது உதவியாளர்களுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து எனது பிறந்தநாளுக்கு, எனக்கும் எனது குழுவினருக்கு நீங்கள் பிரியாணி அனுப்பியதற்காக நன்றிகள் சிம்பு சார், நீங்க ரொம்ப நல்ல மனிதர் என பதிவிட்டுள்ளார்.
Comments are closed.