தேர்தல் அறிவித்த பின்பும் மன்னர் சார்லஸ் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி: வில்லியமுக்கும் முக்கிய பொறுப்பு

17

பிரித்தானியாவில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை ரத்து செய்வதாக ராஜ குடும்பம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பையும் மீறி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார் மன்னர் சார்லஸ்.

விடயம் என்னவென்றால், ஜப்பான் நாட்டு மன்னரும், ராணியும் அரசு முறைப்பயணமாக பிரித்தானியா வர இருக்கிறார்கள். ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல், 27ஆம் திகதிவரை அவர்கள் பிரித்தானியாவில் செலவிட இருக்கிறார்கள். அவர்களுக்கு, மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் விருந்தளிக்க இருக்கிறார்கள்.

ஜப்பான் மன்னரான Naruhito (64) மற்றும் ராணி Masako (60 ஆகிய இருவரும் லண்டனுக்கு வருகை புரியும் நேரத்தில், இளவரசர் வில்லியமும் முக்கிய பொறுப்பு ஒன்றை நிறைவேற்ற இருக்கிறார். ஜூன் மாதம் 25ஆம் திகதி, இளவரசர் வில்லியம்தான் ஜப்பான் மன்னரையும் ராணியையும் வரவேற்க இருக்கிறார். பின்னர் அவர்களை வரவேற்கும் வகையில் லண்டனில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கும் இளவரசர் வில்லியம்தான் அவர்களை வழிநடத்த இருக்கிறார்.

Comments are closed.