இதுவே கடைசித் தடவை: கவலையில் தேரர்

12

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே தனது கடைசித் தடவையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மற்றும் ராஜபக்சவின் பிரசாரம் புறக்கணிக்கப்படும் எனவும், தற்போது சிறிலங்கா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அனைத்தையும் விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரத்ன தேரர் இதனை கூறியுள்ளார்.

Comments are closed.