லவ் டார்ச்சர் செய்த நபர், அவரிடம் இருந்து தப்பிக்க சீரியல் நடிகை பரீனா போட்ட கண்டிஷன்- அவர் செய்த ஷாக்கிங் விஷயம்

19

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரை யாரும் மறந்திருக்க மாட்டோம். பிரவீன் பென்னட் இயக்க அருண்-ரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்க பயங்கர வில்லியாக பரீனா நடித்து வந்தார்.
தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகள் நடத்திவந்த பரீனாவிற்கு நடிகையாக பாரதி கண்ணம்மா பெரிய ரீச் கொடுத்தது.

பின் பிஸியாக சீரியல்கள் நடித்து வந்தவர் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.

இன்னொரு பக்கம் தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, போட்டோ ஷுட் நடத்துவது எனவும் பிஸியாக உள்ளார்.

நடிகை பரீனா ஒரு பேட்டியில் ஷாக்கிங் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது பரீனாவிடம் ஒரு நபர் காதலிக்குமாறு தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்துள்ளார். அவரை அவாய்ட் செய்ய பரீனா எனது வீட்டில் முஸ்லிம் பையனாக இல்லை என்றால் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க என்று பொய் சொல்லி உள்ளார்.

உடனே அந்தப் பையன் மருத்துவமனை போய் முஸ்லிம் பசங்களுக்கு என்ன செய்வார்களோ அதாவது சுன்னத் செய்து கொண்டு வந்து தன்னை காதலிக்கும் படி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த லவ் புரொபோசலை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என கூறியுள்ளார் பரீனா.

Comments are closed.