இறக்கும் நேரத்தில் மற்றவர்களை பற்றி யோசித்து நடிகை ஸ்ரீவித்யா செய்த விஷயம்- நெகிழ்ந்த மக்கள்

15

தமிழ் சினிமாவில் அழகுக்கு பெயர் போன ஒரு நடிகை ஸ்ரீவித்யா.
இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்த குமாரி ஆகியோர் மகள் தான் ஸ்ரீவித்யா. இவர் பிறந்த ஒரு வருடத்தின் அப்பா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட அவரது மனைவி குடும்பத்தை கவனிக்க நேர்ந்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 14 வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. தமிழில் திருவருட்ச்செல்வன், தெலுங்கில் பெட்டராஷி பெத்தம்மா என்ற படங்களில் மூலம் அறிமுகமானார்.
அனைவரையும் ஈர்க்கும் அழகு, அசாத்திய நடிப்பு, அசத்தல் நடனம் என ஸ்ரீவித்யா பெரிய வளர்ச்சி கண்டார்.

கமல்ஹாசனுடன் ஏற்பட்ட காதலுக்கு ஸ்ரீவித்யா அம்மா சம்மதிக்காததால் இருவரும் பிரிந்தனர்.
பின் 1978ம் ஆண்டு மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்தவர் சில பிரச்சனைகளால் 1980ல் விவாகரத்து செய்தார்.

அதன்பின் சினிமாவில் 2வது இன்னிங்ஸை தொடங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார்.
ஆனால் 2003ம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான முடிவையும் எடுத்துள்ளார்.

தான் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்க முன்வந்தார். நடிகர் கணேஷின் உதவியுடன் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் உதவிகள் செய்தார்.

3 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் 2006ம் ஆண்டு தனது 53வது வயதில் உயிரிழந்தார். இறக்கும் நேரத்தில் மற்றவர்களுக்காக யோசித்து ஸ்ரீவித்யா செய்த இந்த விஷயத்திற்கு பிரபலங்களை தாண்டி மக்களுக்கு பாராட்டினார்கள்.

Comments are closed.