ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து செய்தி குறித்து பலரின் கவனம் திரும்பியுள்ளது.
ஒற்றைவிரல் புரட்சியில் வெற்றியீட்டிய அநுரவுக்கு ஒற்றை வரியில் மைத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மைத்திரி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு வாழ்த்து என மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ள நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த அரசியல் மட்டத்தில் அதிக பேசப்பட்டு வருகிறது.
Comments are closed.