நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதன்படி, இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஆளுநர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன தான் பதவி விலகலை இன்று காலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்க தரப்பின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments are closed.