தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல படங்கள் நடித்துள்ளவர் சிறந்த நாயகி என பல விருதுகளை வென்றுள்ளார். 2000ம் ஆண்டு கலைமாமணி விருது எல்லாம் பெற்றார்.
சினிமாவில் மார்க்கெட் குறைய அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் கோலங்கள் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக ஜீ தமிழில் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
நடிகை தேவயானி வீட்டில் தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் பல போராட்டங்களை தாண்டி இயக்குனர் ராஜகுமாரனை 2001ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.
அண்மையில் தனது மகளுடன் ராஜகுமாரன் பேட்டி கொடுத்தார். அதில் அவர் பேசும்போது, நாங்கள் திருமணம் செய்த நேரத்தில் நான் அழகாக இல்லை என்று நிறைய விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் தேவயானி என்னை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை.
என்னை என்னுடைய அம்மா-அப்பா இப்படி பெற்றுவிட்டதால் தான் எல்லோரும் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள், என்னைப் போல் குழுந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என குழந்தையே வேண்டாம் என இருந்தேன், ஆனால் தேவயானி அதற்கு மறுத்துவிட்டார்.
தேவயானி கர்ப்பமாக இருந்தபோது பிப்ரவரி மாதம் தேதி கொடுத்தார்கள், ஆனால் 48 நாட்களுக்கு முன்பே அவருக்கு வலி வந்துவிட்டது.
இரவு 12.5 போல் குழந்தை பிறந்தது, அன்று சொர்க்க வாசல் விசேஷம். அன்று எங்களுடன் யாருமே இல்லை, அந்த நேரத்தில் எங்க பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
குழந்தையை வளர்ந்து எடுப்பதற்கு தேவயானி மிகவும் கஷ்டப்பட்டார் என எமோஷ்னலாக பேசியுள்ளார் ராஜகுமாரன்.
Comments are closed.