நடிகை ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவை தாண்டி தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் எப்போது தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றம் தான் கிடைத்து வருகிறது.
ஜான்வி கபூர் பேட்டி கொடுத்தால் பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசுகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் ஒரு தென்னிந்திய ஹீரோவை பற்றி வியந்து பேசி இருக்கிறார்.
நடிகர் மகேஷ் பாபுவை பற்றி தான் ஜான்வி பேசி இருக்கிறார். “அவருக்கு வயசே ஆகாதா, நீண்ட காலமாக இதே மாதிரி இருக்கிறார். “
“சொல்லப்போனால் என்னை விட அவர் சில நேரம் இளமையாக தெரிகிறார்” என ஜான்வி கூறி இருக்கிறார்.
Comments are closed.