தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா என பலருக்கு படங்களில் நடனம் அமைத்து பிரபலமானவர் ஜானி மாஸ்டர்.
தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார். அடுத்தடுத்து ஹிட் பாடல்களில் நடனம் அமைத்து வளர்ந்து வந்த ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் எழுந்தது.
21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்துள்ளார். அவருடன் பணியாற்றிய பாது பல படப்பிடிப்பு தளங்களுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
புகார் எழுந்ததை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை பெங்களூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments are closed.