மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?- அவரே கூறிய விஷயம்

6

நடிகர் சிம்பு கொரோனா காலத்தில் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் அவர் நடித்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க கடந்த 2012ம் ஆண்டு இப்படம் வெளியானது.

சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகர் அரவிந்த் சாமி தானாம்.

இதுகுறித்து அரவிந்த் சாமி ஒரு பேட்டியில், மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க இருந்தேன், அந்த நேரத்தில் தேதி இல்லாததால் ஒரு மாதம் காத்திருக்க முடியுமா என கேட்டேன்.

ஆனால் படக்குழு ஒப்புக்கொள்ளவில்லை, அவர்கள் முடிவை நான் மதிக்கிறேன் என கூறியுள்ளார்.

Comments are closed.