செல்லுபடியற்ற சாரதி அனுமதி பத்திரத்துடன் காரை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தேரர், கண்டியில் இருந்து குளியாப்பிட்டிய கந்தானேகெதர பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது குருணாகல் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது தேரர் காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்தமை தெரியவந்ததை அடுத்து தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 46 வயதான தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.