நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளதனால் அதிகமான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நகர முடியாத சூழல் காணப்படுகின்றன.
அத்துடன் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதிக சுற்றுலா பயணிகள் கிரகரிவாவியிலும் அதன் கரையோரத்திலும் சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விஷயங்களை அனுபவித்து மகிழ்கிறார்கள்.
இதில் படகு சவாரி வார இறுதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக காணப்படுகின்றது.
Comments are closed.