இலங்கையின் இறுதி தேர்தலாக அமையப்போகும் அநுரவின் வெற்றி : எச்சரிக்கும் தயாசிறி

8

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் அதுவே இந்த நாட்டின் இறுதித் தேர்தலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அநுர திஸாநாயக்க வெற்றி பெற்றால் மீண்டும் இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச(sajith premadasa) வெற்றி பெற்றால் மீண்டும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவதாகவும், ஆனால் அவர்கள் இதுவரை இலங்கைக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

Comments are closed.