வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

8

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையின் மூலம் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேல்மாகாண பிரதம செயலகம் அறிவித்துள்ளது.

Comments are closed.