சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சேர்ந்த பல பிரதிநிதிகள் இலங்கை விஜயம்!

9

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும் , பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 22 பேரும் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து (ANFREL) 6 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்டை நாடுகளைச் சேர்ந்த 7 பேர் இந்த செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ANFREL பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.