ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அமைதியின்மைக்கு ஜேவிபியே காரணம் : சஜித் குற்றச்சாட்டு

7

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்கள் நசுக்கப்படுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது போன்ற வன்முறைச் சம்பவங்களினால் அந்த பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அமைதியின்மை மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலைக்கு தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பங்களிப்பதாக பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தரப்பினரும், அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அதன் அரசியல் கூட்டாளிகளும் இணைந்து நாட்டை வங்குரோத்து செய்வதற்கு காரணமானவர்களை பாதுகாக்கும் கூட்டமைப்பை உருவாக்கி வருவதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments are closed.