தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள சஜித்: ரணில் அறிவிப்பு

7

அனைத்தையும் இலவசமாக தருவதாக கூறும் சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எனக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றது எனவும், தன்னைத் தோற்கடிக்க நானும் அநுரகுமாரவும் தயாராகி வருகின்றோம் என்றும் சஜித் புலம்புகின்றார்.

ஏற்கனவே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் தான் இப்படி ஒப்பாரி வைக்கின்றார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவவில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் மேலும் உரையாற்றுகையில்,

இன்று அநுரகுமார நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருகின்றார். வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அவர் அதிகாரத்தைப் பெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அநுரகுமார, தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும்.”பிரபலமாக இல்லாவிட்டாலும், மக்களின் எதிர்காலத்துக்காக எப்போதும் உண்மையை மட்டும் நான் கூறுகின்றேன்.என தெரிவித்துள்ளார்.

Comments are closed.