நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது.
இதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பல பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments are closed.