ட்ரம்ப் – கமலா ஹரிஸ் விவாதத்தில் வெற்றியீட்டிய வேட்பாளர்

16

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற விவாதத்தில் கமலா ஹரிஸ் வெற்றியீட்டியுள்ளதாக விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவாதம் இன்றையதினம் (11.09.2024) காலை இடம்பெற்றுள்ளது.

ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் ஆகிய இருவரும் 9/11 தாக்குதலின் 23ஆம் ஆண்டு நினைவேந்தலில் இன்று காலை கலந்துகொண்டதன் பின்னர் 90 நிமிடங்களுக்கு நடைபெற்ற விவாதத்தில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, ட்ரம்ப்பின் பிரசார கூட்டங்களிலிருந்து ஆதரவாளர்கள் பிரசாரம் நிறைவடையும் முன்னரே சலிப்புத் தன்மையுடன் வெளியேறி விடுவதாக கமலா ஹரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், கமலா ஹரிஸின் பிரசார கூட்டங்களுக்கு பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, குடியேற்றம் மற்றும் கொள்கை மாற்றங்கள் தெடர்பில் ஹரிஸின் செயற்றிறன் அற்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

ட்ரம்ப் நடைமுறைப்படுத்திய கருக்கலைப்பு தடை மற்றும் 2021ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விமர்சனங்களை கமலா ஹரிஸ் முன்வைத்திருந்தார்.

குறித்த விவாதத்தை பதிவு செய்யப்பட்ட 600 வாக்காளர்கள் நேரலையில் பார்த்துள்ளதுடன் அவர்களில் 63% ஆனோர் கமலா ஹரிஸ் விவாதத்தில் சிறப்பாக செயற்பட்டதாக கூறியுள்ளனர்.

Comments are closed.