ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
தமக்கு பல்வேறு வழிகளில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் தங்களது கருத்துக்களுக்கு எந்த வகையிலும் செவிமடுப்பதில்லை . இதனால் தாம் கடும் அதிருப்தியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெண் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள தயார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.