நாட்டில் பாக்கு விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாக்கு தற்போது 40 ரூபாவாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்நாட்களில் போதிய அளவு அறுவடை இல்லாததாலும், நாட்டில் கிடைக்கும் பாக்குகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதாலும், விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக ஒரு வெற்றிலைக்கு பயன்படுத்தும் பாக்கின் அளவை பாதியாக குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Comments are closed.