ஜனாதிபதி தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பொது வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 4 வரை இது தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தி தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தேர்தல் ஆணையகத்தை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை விமானப்படை உட்பட அரசாங்க வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வது மற்றும் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் கவலையளிக்கின்றன.
இந்த விடயங்கள் மக்களுக்கு வழங்கும் பலன்களை தாம் ஆதரிக்கும் அதே வேளையில், தேர்தல் காலத்தில் சில வேட்பாளர்களுக்குச் சாதகமாக அவற்றை அறிவிப்பது, நம்பி கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பொது வளங்களை தவறாகப் பயன்படுத்தினால், www.apesalli.lk என்ற முகவரிக்கு அல்லது 0763223442 என்ற அவசர இலக்கங்களுக்கு முறையிடுமாறு அனைத்து குடிமக்களுக்கும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா அழைப்பு விடுத்துள்ளது.
Comments are closed.