டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் தனது கர்ப்பிணி மனைவியை பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் படோவிட்ட 3 ஆம் கட்டத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
டுபாய்க்கு தப்பிச்சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளரான சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக கொள்வனவு செய்து வீட்டில் பொதி செய்து ரத்மலானை, தெஹிவளை, மொரட்டுவ, கொரளவெல்ல, பொரலஸ்கமுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் விந்பனை செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிலியந்தலை ஆகிய பகுதிகளில் சில்லறை விலையில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு விசேட அதிரடிப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் முதித தல்படடு அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் சார்ஜன்ட் (56958) பிரசன்ன, (40753) ஹெட்டியாராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான (86453) ஜயதிலக்க, (85009) வீரவன்ச ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.