சுவிட்சர்லாந்து அரசு, தன் குடிமக்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டு முதல், முதுமை மற்றும் இயலாமை ஓய்வூதியம், 2.9 சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுவிஸ் அரசு, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 35 சுவிஸ் ஃப்ராங்குகள் அதிகரித்து 1,260 சுவிஸ் ஃப்ராங்குகளாக அளிக்க உள்ளது.
அத்துடன், குழந்தைகளுக்கான நிதி உதவியும் அதிகரிக்க உள்ளது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான நிதியுதவி, 200 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 215 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், கல்விக்கான நிதி உதவி, மாதம் ஒன்றிற்கு, 250 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 268 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும் அதிகரிக்க உள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.