ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

8

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 31 வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நபர்களை பதிவு செய்தல், சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாளியின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், பொதுமன்னிப்புக் காலத்தில் தமது விசாக்களை சட்டரீதியாக ஏற்பாடு செய்வதற்கு அல்லது இலங்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed.