பிரித்தானியாவில் கடந்த 15 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த மிகவும் அரிய பூ Ghost Orchid சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பூ முன்பு அழிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது இங்கிலாந்தில் உள்ள காட்டுப் பகுதியில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் இருப்பிடத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த இடம் ரகசியமாக வைத்திருக்கப்பட்டுள்ளது.
இந்த பூவுக்கு வெள்ளை நிறம் இருப்பதுடன், இது அதிகம் வெப்பம் இல்லாத காடுகளின் அடியில் வளரக்கூடியது.
இதுவரை பிரித்தானியாவில் வெறும் ஆறே பேர் மட்டுமே இந்த பூவைக் கண்டுள்ளனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய பூவிற்கு இலைகள் கிடையாது, மேலும் இதற்கு சூரிய ஒளி தேவையில்லை, எனவே அது பூக்கும் சரியான சூழ்நிலைகளில் மட்டுமே பூவாக முளைக்கும்.
இந்த அரிய பூவை கண்டுபிடித்த மருத்துவர் ரிச்சர்ட் பேட், இது பிரித்தானியாவில் இனியும் அழியாமல் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது என்று கூறியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, இது 1854 முதல் இதுவரை பூவாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது உறுதியாகும்.
இந்த பூவைக் கொய்யவோ அல்லது தோண்டியெடுக்கவோ சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.