கனடா செல்லக் காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

15

எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கனடாவுக்கு (Canada) வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) நேற்றையதினம் (26) தெரிவித்துள்ளார்.

இதன் படி, எதிர்வரும் மாதம் முதல் கனடாவில் வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 இற்கு அதிகமாக உள்ள இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த கட்டுப்பாட்டில் இருந்து பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவில் வேலைக்காக அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த கட்டுப்பாடு கனடாவிற்கு செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கும் பொருந்தும்.

Comments are closed.