ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை மக்கள் மீண்டும் புறக்கணித்த சம்பவம் இன்று பதிவாகி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மும்முரமாக தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் மற்றுமொரு பிரசார கூட்டம் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். ஏற்கனவே அவர் கொழும்பில் மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது ஒரு சிலரை தவிர எவரும் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை தான் பொது மக்களுக்கு பணமோ, மதுபானமோ கொடுத்து அழைக்கவில்லை. நியாயமான முறையில் செயற்படுவதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மீண்டும் மக்களால் ஏமாற்றப்பட்ட பொன்சேகா
Comments are closed.