கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

10

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், முறையான விஜயத்தின் அடிப்படையில் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளன

ஹெ பெய் ( HE FEI), இ வுஸிசான்;(WUZHISHAN) மற்றும் க்ய்லியான்சான்(QILIANSHAN) ஆகிய கப்பல்களே கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன.

HE FEI என்பது 144.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரக் கப்பலாகும். இது 267 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய இரண்டும் 210-மீட்டர் நீளமுள்ள தரையிறங்கும் தளத்தை கொண்டுள்ளன.

அத்துடன் முறையே 872 மற்றும் 334 பணியாளர்களை கொண்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படவுள்ளன

இதேவேளை இன்று இந்தியாவின் ஐஎன்எஸ் மும்பாய் என்ற போர்க்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

Comments are closed.