கொழும்பில் விடுதிக்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் கொலை – பல்கலைக்கழக மாணவர் கைது

12

மருதானை – தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள தங்கும் விடுதியில் வர்த்தகர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 19 வயது மாணவன் மருதானை பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் வெலிமடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த 44 வயதுடைய வர்த்தகர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர் மற்றும் பல்கலைக்கழக மாணவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த  கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர் விடுதிக்கு வந்து பல்கலைக்கழக மாணவனிடம் விளக்குகளை அணைக்குமாறு கூறியுள்ளார். எனினும் தனது கற்றல் வேலைகளை முடித்த பின்னர் விளக்குகளை அணைப்பதாக மாணவன் கூறியுள்ளார்.

இதன்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மாணவன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வர்த்தகரை தாக்கியுள்ளார்.

இதன்போது கடும் காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இஷாந்த குமார அபலகொடுவவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments are closed.