தபால் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

11

தபால் வாக்குச் சீட்டுகளை இன்றைய தினம் தபால் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Comments are closed.